உதயதாரகையின் கால்பந்தாட்ட தொடரில் 3ஆம் இடத்தை பெற்ற கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

கற்­கோ­வ­ளம் உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­தது.

உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணியை எதிர்த்து சண் ஸ்ரார் அணி மோதி­யது.

சுஜாஸ்­கான் இரு கோல்­க­ளைப் பதிவு செய்ய முதல் பாதி­யாட்­டத்­தில் 2:0 என்ற கோல் கணக்­கில் கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி முன்­னிலை வகித்­தது.

இரண்­டா­வது பாதி­யாட்­டத்­தி­லும் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி­யின் ஆதிக்­கம் தொடர்ந்­தது.

கீர்த்­தி­கன் மற்­றும் மாது­ஜன் ஆகி­யோர் கோல்­க­ளைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடி­வில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி 4:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று மூன்­றா­வது இடத்­தைத் தன­தாக்­கி­யது.

ஆட்ட நாய­க­னாக கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி­யைப் பிர­தி­ நி­தித்­து­வம் செய்த சுஜாஸ்­கான் தெரிவு செய்­யப்­பட்­டார்.

இறு­தி­யாட்­டம் எதிர்­வ­ரும் சனிக் கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த இறு­தி­யாட்­டத்­தில் குறிஞ்­சிக்­கு­ம­ரன் அணியை எதிர்த்து பலாலி விண்­மீன் அணி மோத­வுள்­ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்