NEPL உதைபந்தாட்ட தொடரின் இறுதிக்குள் நுளைந்த கிளிநொச்சியின் மைந்தர்களை வாழ்த்தி வழியனுப்பிவைத்த சிறீதரன் M.P!

Report Print Samaran Samaran in கால்பந்து

கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பில், வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கிளியூர் கிங்ஸ் அணியை சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (26/08/2018) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ரில்கோ கொங்கிரஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தெற்காசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பரிசுத்தொகையை கொண்ட இத்தொடரானது வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் இருந்து 12 அணிகள் பங்குபற்றிய ஒரு பெருந் தொடராக நடைபெற்று வருகின்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers