இரண்டாவது அணியாக பிளேஓவ் சுற்றுக்குள் நுளைந்த IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் இறுதி சுற்றான 11ஆம் சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.

இந்த சுற்றில் வெற்றி பெற்றால் தான் பல அணிகளுக்கு அடுத்த சுற்றுக்குள் நுளைவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் இந்த சுற்று பல அணிகளுக்கு முக்கியத்துவம்வாய்ந்ததாக காணப்படுகிறது.

துரையப்பா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற 2ஆவது போட்டியில் மாதோட்டம் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் கிளியூர் கிங்ஸ் அணி 02:00 என்ற கோல் கணக்கில் மாதோட்டம் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணி சார்பாக ஜொப் மைக்கல் 45, 89 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை தனது அணிக்காக பதிவு செய்தார்.

இறுதிவரை கடுமையாக போராடிய மாதோட்டம் அணியினரால் கிளியூர் கிங்ஸ் அணி வீரர்களின் எதிர்ப்பாட்டத்தை மீறி எவ்வித கோல்களையும் பதிவு செய்ய முடியவில்லை.

NEPL தொடரில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் முதல் அணியாக ரில்கோ FC அணியும் இரண்டாவது அணியாக கிளியூர் கிங்ஸ் அணியும் 3, 4 ஆவது அணிகளாக வல்வை FC மற்றும் மன்னார் FC அணிகள் பிளேஓவ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்று 20/08/2018 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதலாவது பிளேஓவ் ஆட்டத்தில் ரில்கோ FC அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்