ஐசாக் அபார ஆட்டம்: மாதோட்டத்தை பந்தாடிய தமிழ் யுனைடட் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் 10ஆம் சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற்ற 1ஆவது போட்டியில் மாதோட்டம் FC அணியை எதிர்த்து தமிழ் யுனைடட் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் தமிழ் யுனைடட் அணி 06:02 என்ற கோல் கணக்கில் மாதோட்டம் FC அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் தமிழ் யுனைடட் அணி சார்பாக சுதர்சன் 15 ஆவது நிமிடத்தில் முதல் கோலையும் ஐசாக் 32, 43, 58, 74, 79 ஆவது நிமிடங்களில் தொடர்ச்சியாக 5 கோல்களை பதிவு செய்தார்.

மாதோட்டம் அணி சார்பாக திலீபன் 36 ஆவது நிமிடத்திலும் நிதர்சன் 86 ஆவது நிமிடத்திலும் தமது அணிக்காக கோல்களை பதிவு செய்தனர்.

NEPL தொடரில் தொடர்ச்சியாக தோல்வியை எதிர்கொன்டு வரும் மாதோட்டம் FC அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers