வெளிநாட்டு வீரர்களில் அதிரடி ஆட்டம் கைகொடுக்க முதல் அணியாக பிளேஓவ் சுற்றுக்குள் முன்னேறிய ரில்கோ FC!

Report Print Samaran Samaran in கால்பந்து

IBC தமிழ் நிறுவனத்தால் நடாத்தப்படும் வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட பிரீமியர் லீக் போட்டியின் 10ஆம் சுற்று ஆட்டங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது.

துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற 2ஆவது போட்டியில் முல்லை பீனிக்ஸ் அணியை எதிர்த்து ரில்கோ FC அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் ரில்கோ FC அணி 05:00 என்ற கோல் கணக்கில் முல்லை பீனிக்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் ரில்கோ FC அணி சார்பாக ஹரிசன் 4ஆவது நிமிடத்தில் முதல் கோலையும் சஜீவன் 52, 63 ஆவது நிமிடங்களில் 2ஆவது 3ஆவது கோல்களையும் வெளிநாட்டு வீரரான ஹசம்ரீ 76, 83 ஆவது நிமிடங்களில் 4,5 ஆவது கோல்களை பதிவு செய்தனர்.

இறுதிவரை போராடிய முல்லை அணியால் எவ்விதமான கோலையும் பதிவு செய்ய முடியவில்லை.

இந்த போட்டியில் ரில்கோ அணி வெற்றியை பதிவு செய்ததன் மூலம் பிளேஓவ் சுற்றுக்குள் முதல் அணியாக நுளைந்தது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers