ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த NEPL போட்டி: பீமாவின் கடைசி நேர கோலால் வல்லை FC வெற்றி!

Report Print Samaran Samaran in கால்பந்து

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அநுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ரியூப் தமிழின் வல்வை FC அணியை எதிர்த்து வவுனியா வொறியர்ஸ் அணி மோதியது.

இதில் வல்லை FC அணி, 01:00 என்ற கோல் கணக்கில் பலமிக்க வவுனியா வொறியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வல்வை FC அணி சார்பாக அணியின் நட்சத்திர வீரர் பீமா 72 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்து தனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.

புதிதாக 5 வீரர்களை இணைத்து ஆடிவரும் வவுனியா வொறியர்ஸ் அணி அன்மைக்கால ஆட்டங்களில் வெற்றிகளை பதிவுசெய்து வந்தது.

கடைசியாக பலமான கிளியூர் கிங்ஸ் அணியுடன் நடந்த போட்டியிலும் வவுனியா வொறியர்ஸ் அணி வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனாலும் இந்த போட்டியில் வல்வை FC அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தை மீறி கோலடிக்க முடியவில்லை.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers