புதிய வீரர்களுடன் களமிறங்கி அதிரடி காட்டிய வவுனியா வொறியர்ஸ் அணி: அதிர்ச்சி தோல்வியடைந்த கிளியூர் கிங்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

தெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அநுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து வவுனியா வொறியர்ஸ் அணி மோதியது.

இதில் வவுனியா வொறியர்ஸ் அணி, 02:00 என்ற கோல் கணக்கில் கிளியூர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வவுனியா வொறியேர்ஸ் அணி சார்பாக வெளிநாட்டு வீரர் மைக்கல் 02 ஆவது நிமிடத்திலும், மேனன் 13 ஆவது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தனர்.

இறுதிவரை கோல் அடிக்க போராடிய கிளியூர் கிங்ஸ் அணியினரால் எவ்வித கோல்களையும் பதிவு செய்யமுடியவில்லை.

தொடரின் ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி தீடீர் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியிருக்கிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers