மைக்கல் ஹற்றிக் கோல்: மட்டு நகரை துவம்சம் செய்த வவுனியா வோரியர்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

மைக்கல் ஹற்றிக் கோல் உதவியுடன் வவுனியா வோரியர்ஸ் அணிஇ 04:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், மூன்றாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் வவுனியா வோரியர்ஸ் அணியை எதிர்த்து மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணி மோதியது.

போட்டி தொடங்கிய முதல் வவுனியா வோரியர்ஸ் அணியின் ஆட்டமே மைதானத்தில் நிலைபெற்றது.

26 ஆவது நிமிடத்தில் வோரியர்ஸ் அணியன் என்.மைக்கல் முதலாவது கோலை அடித்தார்.

தொடர்ந்து, 33 ஆவது நிமிடத்தில் வோரியர்ஸ் அணியின் பி.மனோஜ் கோல் ஒன்றை அடித்தார்.

முதற்பாதியாட்டம் அந்த இரண்டு கோல்களுடன் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில், 59 ஆவது நிமிடத்தில் வோரியர்ஸ் அணியின், என்.மைக்கல் கோல் ஒன்றை அடித்தார்.

போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் மைக்கல் மேலும் ஒரு கோலை அடித்தார்.

போட்டி முடிவில் வவுனியா வோரியர்ஸ் அணி, 04:00 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

ஆட்டநாயகனாக வவுனியா வோரியர்ஸ் அணியின் என்.மைக்கல் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்