தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியை பதிவு செய்த முல்லை பீனிக்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், மூன்றாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

19 ஆம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முல்லைத்தீவு பீனிக்ஸ் அணியை எதிர்த்து மாதோட்டம் எப்.சி அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தின் 4 ஆவது நிமிடத்தில், முல்லை பீனிக்ஸ் அணியின் எம்.றொக்ஸன் முதலாவது கோலை அடித்தார்.

முதற்பாதியாட்டம் அந்த ஒரு கோலுடன் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில், 85 ஆவது நிமிடத்தில் முல்லை பீனிக்ஸ் அணியின் வி.கீதன் மேலும் ஒரு கோலை அடித்தார்.

முடிவில் முல்லை பீனிக்ஸ் அணி, 02:00 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

இதுவரையில் நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்விகளைச் சந்தித்த, முல்லைத்தீவு பீனிக்ஸ் அணி, இந்தப் போட்டியிலேயே முதலாவது வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்