இறுதிவரை போராடிய மட்டு நகர் சுப்பர் கிங்ஸ்: ஆனால் இலகுவாய் வென்றது ரில்கோ கொங்கியூறஸ்!

Report Print Samaran Samaran in கால்பந்து

வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில் 18 ஆம் திகதி நடைபெற்ற ஆட்டத்தில் ரில்கோ கொங்கியூறஸ் அணியை எதிர்த்து மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் ரில்கோ அணி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து, இரண்டாவது பாதியாட்டத்தில் ரில்கோ அணி, மேலும் ஒரு கோலை அடித்தது.

முடிவில் ரில்கோ அணி, 04:01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

ரில்கோ அணி சார்பாக திவாந்த் 3 கோல்களையும், தனேஸ் 1 கோலையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரில்கோ அணியின் திவாந்த் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers