முக்கிய வீரரின் காயத்தால் பின்னடைவை சந்திக்கும் மான்செஸ்டர் சிட்டி!

Report Print Samaran Samaran in கால்பந்து
முக்கிய வீரரின் காயத்தால் பின்னடைவை சந்திக்கும் மான்செஸ்டர் சிட்டி!
26Shares
26Shares
lankasrimarket.com

மான்செஸ்டர் சிட்டி அணி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனுக்கான சாம்பியன் பட்டத்தை வெல்லும் நிலையில் உள்ளது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஸ்டிரைக்கர் செர்ஜியோ அக்யூரோ மான்செஸ்டர் சிட்டி அணி தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதற்கு முக்கிய காரணம்.

இவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்குபோது முழங்காலில் வலி இருப்பதாக உணர்ந்தார். இதனால் கிளப் டாக்டர் காயம் குறித்து பரிசோதித்தார்.

அப்போது இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் காயம் முழுவதுமாக குணமடைய தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

இன்று நடைபெறும் ஸ்டோக் அணிக்கெதிரான ஆட்டத்தில் அக்யூரோ பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் மார்ச் 31-ந்தேதி எவர்டன் அணிக்கெதிராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி இத்தாலியையும், 27-ந்தேதி ஸ்பெயினையும் அர்ஜென்டினா நட்பு முறை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

இதில் அக்யூரோ கலந்து கொள்வது சந்தேகம் என கூறப்படுகிறது. இந்த சீசனில் அக்யூரோ 30 கோல்கள் அடித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்