இறக்கும் முன்பு தனது இளைய மகன் குறித்து மரடோனா பதிவு செய்த நெஞ்சை உலுக்கும் செய்தி

Report Print Arbin Arbin in கால்பந்து
266Shares

கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரம் டிகோ மரடோனா மாரடைப்பால் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு, தமது இளைய மகன் தொடர்பில் பதிவு செய்த நெஞ்சை உலுக்கும் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கால்பந்து உச்ச நட்சத்திரம் டிகோ மரடோனா மாரடைப்பால் திடீரென்றி மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பில், மருத்துவ ரீதியான பிழை ஏதும் நடந்துள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மரடோனா தமது 7 வயது மகனின் வளர்ப்பு தந்தையிடம், மகனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கோரிக்கை வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மரடோனாவுக்கும் அவரது நீண்ட கால முன்னாள் காதலிக்கும் பிறந்த குழந்தையே Dieguito Fernando.

தற்போது 7 வயதாகும் பெர்னாண்டோ, தமது தாயார் Veronica Ojeda உடனும் வளர்ப்பு தந்தையுடனும் வசித்து வருகிறார்.

மரடோனாவின் இறுதிச்சடங்கில் மகனுடன் கலந்துகொண்டிருந்தார் Veronica Ojeda.

மரடோனாவுக்கு 5 பிள்ளைகள். சட்டப்பூர்வமாக மரடோனா Claudia Villafane என்பவரை மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது பிள்ளைகளே தல்மா(33) மற்றும் கியான்னினா(31).

ஆனால் இறக்கும் நாள் வரை மரடோனா தமது மகன் Dieguito Fernando தொடர்பில் எவ்வித கருத்தும் வெளிப்படுத்தியதில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக தமக்கு 4 பிள்ளைகள் என்றே மரடோனா கூறி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்