கால்பந்து ஜாம்பவான் மாரடோனா தீடீர் மரணம்! கடும் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்-பிரபலங்கள்

Report Print Santhan in கால்பந்து
2085Shares

அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா தீடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் மாரடோனா(60) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவர் வீட்டில் இருந்து வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கால்பந்து உலகின் ஜாம்பவான் ஆன மாரடோனா கடந்த 1986-ஆம் ஆண்டு அர்ஜெண்டினா உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இவரின் மரணச் செய்தியைக் கேட்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார். அதே போன்று ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சோகமாக தங்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்