ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் தள்ளிவைப்பு?

Report Print Kavitha in கால்பந்து

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால் 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போட்டி இந்தியாவில் நவம்பர் 2-ந் திகதி முதல் 21-ந் திகதி வரை நடக்க இருந்தது.

வெளிநாடுகளில் நடக்க இருந்த இதற்கான தகுதி சுற்று போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறவில்லை.

இதனால் இந்த போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதனை தொடர்ந்து இப்போட்டி அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 17-ந் திகதி முதல் மார்ச் 7-ந் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்