ரொனால்டோ 100-வது சர்வதேச கோல் அடித்து சாதனை! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்

Report Print Kavitha in கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

அதில் சோல்னா நகரில் நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் அணி,ஸ்வீடன் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் அணிக்காக இரண்டு கோல்களையும் அடித்து அதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இப்போட்டில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டது.

அதுமட்டுமின்றி இவர் அடித்த இரு கோல்களையும் 45-வது மற்றும் 72-வது நிமிடம் அடித்து ரொனால்டோ சாதனைப்படைத்தார்.

உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் இந்த சாதனையை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்