மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் விலகல்

Report Print Basu in கால்பந்து

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

இரண்டு டி-20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளன. நாளை 3வது டி-20 போட்டி நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி டிசம்பர் 15ம் திகதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த ஷிகர் தவான், முழங்கால் காயம் காரணமாக டி-20 தொடரிலிருந்து விலகினார்.

தற்போது, காயம் குணமடையாததால் ஷிகர் தவான் ஒரு நாள் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்