புதிய வரலாற்று சாதனை படைத்த மெஸ்சி!

Report Print Kabilan in கால்பந்து

பார்சிலோனா அணியின் தலைவர் மெஸ்சி, தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி, கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போதைய ஜாம்பவானாக திகழும் மெஸ்சி, பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், யூரோ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், ஸ்லாவியா பிராக் அணியை மெஸ்சியின் பார்சிலோனா அணி எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 3வது நிமிடத்திலேயே மெஸ்சி கோல் அடித்தார். இதன்மூலம், தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

AFP

இதற்கு முன்பு எந்த வீரரும் இதனை செய்யாததால், மெஸ்சி கால்பந்து உலகில் புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கிடையில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லாவியா பிராக் அணியை வீழ்த்தியது.

AFP

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்