மேடையில் மகன்களின் கையால் தங்க ஷூ விருதை பெற்ற மெஸ்சி! நெகிழ்ச்சி தருணத்தின் வீடியோ

Report Print Kabilan in கால்பந்து

பார்சிலோனா அணி வீரர் லயோனல் மெஸ்சி 6வது முறையாக தங்க ஷூவை வென்று சாதனை படைத்துள்ளார்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, கிளப் அணியான பார்சிலோனாவில் விளையாடி வருகிறார்.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடர்களில், அதிக கோல்கள் அடித்த வீரருக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்படும்.

இந்நிலையில், 2018-19 சீசனில் லா லிகா தொடரில் லயோனல் மெஸ்சி 34 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்தார். பிரான்சில் நடைபெறும் லீக் 1யில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடும் கிலியன் மப்பே 33 கோல்கள் அடித்து இரண்டாம் இடம் பிடித்தார்.

இதனால் மெஸ்சிக்கு தங்க ஷூ வழங்கப்பட்டது. அவர் இதனை 6வது முறையாக வென்றதுடன், தொடர்ச்சியாக 3 முறை தங்க ஷுவை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த விருதினை மெஸ்சியின் இரு மகன்கள் மேடையேறி வந்து, தங்களது தந்தையின் கையில் வழங்கினர். அதனை மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்ட மெஸ்சி, தனது பிள்ளைகளுக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். இது பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மெஸ்சி போட்டியாளராக கருதப்படும் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, ஒட்டுமொத்தமாக நான்கு முறை தங்க ஷூவை வென்றுள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்