யூரோ தகுதிச்சுற்று.. ஜேர்மனியை துவம்சம் செய்த நெதர்லாந்து!

Report Print Kabilan in கால்பந்து

2020 யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில், நெதர்லாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது.

ஜேர்மனியின் Hamburg நகரில் நடந்த 2020 யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில், குரூப் சி பிரிவில் ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே ஜேர்மனி வீரர் Serge Gnabry கோல் அடித்தார். அதற்கு உடனடியாக நெதர்லாந்தினால் கோல் அடிக்க முடியவில்லை.

இரு அணிகளும் போட்டி போட்டு விளையாடியதால், அதன் பின்னர் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் நெதர்லாந்து ஆதிக்கம் செலுத்தியது.

பரபரப்பாக சென்ற 2ஆம் பாதியில் நெதர்லாந்தின் Frenkie de jong, 59வது நிமிடத்தில் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் ஜேர்மனி வீரர் jonathan Tah 66வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கோலை தடுக்க முயன்றதில் சுய கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ஜேர்மனிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த அணியின் குரூஸ், அபாரமாக கோல் அடித்தார். பின்னர் 79வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மாலென், 90+1 நிமிடத்தில் Georginio ஆகியோர் ஒரு கோல் அடித்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...