என்னவொரு அற்புத ஆட்டம்..! ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த கால்பந்து வீரர்.. வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கால்பந்து

ரஷியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ரோஷ்டோவ் அணி வீரர் ஒருவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு எதிரணியின் கோலை தடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் ரஷியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் Lokomotiv Moscow-FC Rostov அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், FC Rostov அணி 2-1 என்ற கோல் கணக்கில் Lokomotiv Moscow அணியை வீழ்த்தியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய FC Rostov அணி வீரர் Evgeni Chernov, அவரது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் எதிரணி வீரர்கள் கோல் கம்பத்தை நெருங்கி வந்து, கோல் அடிக்க முயன்றபோது Chernov விரைந்து செயல்பட்டு தடுத்தார்.

அவர் கீழே விழுந்து கிடந்த நிலையிலும், அடுத்த சில விநாடிகளில் எதிரணியின் மற்றொரு முயற்சியையும் தடுத்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பல்வேறு கால்பந்து வீரர்களும் Chernovவின் ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர்

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்