ஒரு வீரருக்காக 73 மில்லியன் யூரோக்கள்.. முதல் போட்டியிலேயே 4 கோல்கள் அடித்து அசத்தல்!

Report Print Kabilan in கால்பந்து

மான்செஸ்டர் அணியில் இருந்து இண்டர் மிலன் அணிக்கு மாறிய ரொமேலு லூகாகு, தனது முதல் போட்டியிலேயே 4 கோல்கள் அடித்து மிரட்டினார்.

பெல்ஜியம் அணியின் முன்னணி கால்பந்து வீரர் ரொமேலு லூகாகு(26). மான்செஸ்டர் கிளப் அணியில் விளையாடி வந்த இவர், இத்தாலியின் இண்டர் மிலன் அணிக்கு மாறினார்.

அந்த இவருக்காக 73 மில்லியன் யூரோக்கள் வழங்கியது. இத்தாலியின் முன்னணி லீக் தொடரான செர்ரி ஏ-யில் இண்டர் மிலன் அணி வரும் 26ஆம் திகதி முதல் விளையாட உள்ளது.

அதற்கு முன்பாக, நட்பு ரீதியான போட்டியில் அந்த அணி விளையாடி வருகிறது. விர்ச்சஸ் பெர்காமோ அணிக்கு எதிரான போட்டியில் இண்டர் மிலன் ஆடியது. இது ரொமேலு லூகாகு அந்த அணியில் விளையாடும் முதல் போட்டியாகும்.

Getty Images

அபாரமாக செயல்பட்ட அவர், விர்ச்சஸ் பெர்காமோவுக்கு எதிராக 4 கோல்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம், இண்டர் மிலன் அணி மொத்தம் 8 கோல்கள் அடித்தது. விர்ச்சஸ் பெர்காமோ அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், அந்த அணி 0-8 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

உலகின் முன்னணி Striker ஆக திகழும் லுகாகு, கடந்த 2017ஆம் ஆண்டில் எவர்டன் அணியில் இருந்து மான்செஸ்டர் அணிக்கு மாறினார். அந்த அணிக்காக 66 போட்டிகளில் 28 கோல்கள் அடித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்