ஊழல் குற்றச்சாட்டு... மெஸ்ஸிக்கு நேர்ந்த கதி! சோகத்தில் ரசிகர்கள்

Report Print Basu in கால்பந்து

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த காரணத்திற்காக மெஸ்ஸிக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்கா தொடரில் மூன்றாம் இடத்திற்கான பிளேஆப்பில் சிலி-அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டியின் போது சிலி வீரர் கேரி மெடலுக்கும், மெஸ்ஸிக்கு மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, மெஸ்ஸிக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். போட்டிக்கு பின் பேசிய மெஸ்ஸி, இத்தொடர் போட்டியை நடத்தும் பிரேசிலுக்கு ஆதரவாக நிர்ணயிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், 50,000 டொலர் அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மெஸ்ஸி மீதான இந்த தடை நீக்கப்படாவிட்டால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிலி, மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனியுடன் நடைபெறவுள்ள போட்டிகளை அவர் தவறவிடக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்