ஜம்பவான் மெஸ்ஸிக்கு தடை மற்றும் அபராதம் விதிப்பு: காரணம் இது தான்

Report Print Basu in கால்பந்து

உலகின் தலைசிறந்த வீரர்கள் ஒருவரான அர்ஜென்டினா அணித்தலைவர் லியோன்ல் மெஸ்ஸிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் 1,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோபா அமெரிக்கா தொடரில் மூன்றாம் இடத்திற்கான பிளேஆப்பில் சிலி-அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டியின் போது சிலி வீரர் கேரி மெடலுக்கும், மெஸ்ஸிக்கு மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, மெஸ்ஸிக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். போட்டிக்கு பின் பேசிய மெஸ்ஸி, இத்தொடர் போட்டியை நடத்தும் பிரேசிலுக்கு ஆதரவாக நிர்ணயிக்கப்பட்டதாக மெஸ்ஸி குற்றம்சாட்டினார்.

கோபா அமெரிக்கா தொடரின் சர்ச்சைக்குரிய அரையிறுதியில் அர்ஜென்டினாவை பிரேசில் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான CONMEBOL தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மெஸ்ஸி, மேலும் அவரது பதக்கத்தை வாங்கவும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து CONMEBOL தரப்பு கூறியதாவது, மெஸ்ஸியின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, உலகளில் ஐந்து முறை ஆண்டின் சிறந்த வீரர் பட்டத்தை வென்றுள்ள மெஸ்ஸிக்கு கடுமையான தடையை விதிப்பதில் இருந்து பின்வாங்குகிறோம்.

அதே சமயம், ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் 1,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 2022 உலகக் கோப்பைக்கான அர்ஜென்டினாவின் முதல் தகுதிப் போட்டியில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அர்ஜென்டினா கால்பந்து கழகத்தின் தலைவரான கிளாடியோ டாபியாவை பிபாவில் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக CONMEBOL நீக்கியது.

கோபா அமெரிக்காவின் போதும் அதற்குப் பின்னரும் CONMEBOL-யை டாபியா கடுமையாக விமர்சித்தார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்