ரொனால்டோ மீதான பாலியல் வழக்கில் புதிய திருப்பம்

Report Print Basu in கால்பந்து

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மாட்டார் என அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் அமெரிக்க பெண் கேத்ரின் மயோர்காவை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரொனால்டோவுக்கு எதிராக நீதிமன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டன. எனினும், தற்போது ஜீவென்டஸ் கிளப் அணியில் விளையாடும் கால்பந்து வீரர் ரொனால்டோ குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

பின்னர் அவரது சட்டக் குழு, மயோர்காவுடன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வை எட்டவும், இடைதரகர் மூலம் விஷயத்தைத் தீர்க்கவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

2009 ஆம் ஆண்டில் ரொனால்டோவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறும் மயோர்கா, ஒரு வருடம் கழித்து அவரிடமிருந்து 3,75,000 டாலர் வாங்கியதை ஏற்றுக்கொண்டார். ஆனால் 2018 ஆம் ஆண்டில் இந்த வழக்கை மீண்டும் திறக்க முயன்றுள்ளார், மீ டு (MeToo) மூலம் மீண்டும் பேசுவதற்கு மயோர்கா தூண்டப்பட்டதாகக் அவரது வழக்கறிஞர் கூறினார்.

இருப்பினும், மயோர்காவின் குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லாததால், அதை உறுதிப்படுத்த முடியாது என்றும், எனவே, ரொனால்டோவுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் வரப்போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் கூறினர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்