இறுதி நொடியில் பாதி மைதானத்திலிருந்து கோல்! ஷாக் ஆன ரொனால்டோ அணி..இங்கிலாந்து வீரர் ஹாரியின் வீடியோ

Report Print Basu in கால்பந்து

சிங்கப்பூரில் நடந்த இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பையில் டோட்டன்ஹாமின் அணி வீரர் ஹாரி கேன், கடைசி நிமிடத்தில் பாதி மைதானத்திலிருந்து கோல் அடித்து அணியை வெற்றிப்பெற செய்த வீடியோ இணையத்தில வைரலாகியுள்ளது.

நேற்று சிங்கப்பூரில் நடத்த போட்டியில் டோட்டன்ஹாமின்-ஜுவென்டஸ் அணிகள் மோதின. போட்டியின் 30 வது நிமிடத்தில் டோட்டன்ஹாமின் வீரர் லமேல முதல் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் டோட்டன்ஹாமின் அணி 1-0 என முன்னிலைப்பெற்றது.

இரண்டாவது பாதியின் 56வது நிமிடத்தில் ஜீவென்டஸ் அணி வீரர் ஹிகின் கோல் அடித்தார். அதை தொடர்ந்து ஜீவென்டஸ் அணியில் விளையாடும் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ 60வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

எனினும், 65வது நிமிடத்தில் டோட்டன்ஹாமின் வீரர் மாவ்ரா கோல் அடிக்க போட்டி 2-2 என சமன் ஆனது. போட்டியின் முழு நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதன் போது கடைசி நிமிடமான 93வது நிமிடத்தில் டோட்டன்ஹாமின் அணியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன், பாதி மைதானத்தில் இருந்து கோல் அடித்து அசத்தினார். இதை கண்டு ஜீவென்டஸ் அணியினர் ஷாக் ஆனார்கள்.

இறுதியில், 3-2 என்ற கோல் கணக்கில் ஜீவென்டஸ் அணியை வீழ்த்தி டோட்டன்ஹாமின் வெற்றியை பதிவு செய்தது. பாதி மைதானத்திலிருந்து கோல் அடித்த ஹாரி கேனை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்