மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் மகுடம் சூடிய அமெரிக்கா

Report Print Vijay Amburore in கால்பந்து

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்க பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த 8வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது.

இதில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் நேருக்குநேர் மோதின. இரு அணிகளும் லீக் போட்டியில் ஒருமுறை கூட தோல்வியை தழுவாததால், இறுதி போட்டி மக்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருந்தது.

நெதர்லாந்து அணி ஆரம்பம் சற்று சிறப்பாக செயல்பட்டதால், அமெரிக்க அணி முதல் ஒரு மணி நேரத்திற்கு திணற ஆரம்பித்தது.

அந்த சமயத்தில் அமெரிக்காவின் மேகன் ராபினோ தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முதல் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் கால்பந்து தொடரில் அவர் தன்னுடைய 6 வது கோலை பதிவு செய்தார்.

பின்னர் 69 வது நிமிடத்தில் ரோஸ் லாவெல்லே மற்றொரு கோல் அடித்து அசத்த, 2-0 என்கிற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்