மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா அமெரிக்கா?

Report Print Kabilan in கால்பந்து

பிரான்ஸின் லயனில் இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

பிரான்ஸ் நாட்டில் 24 அணிகள் பங்கேற்றுள்ள 8வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் அணியான அமெரிக்கா, இதுவரை தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதேபோல் நெதர்லாந்து அணியும் தோல்வியில்லாமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இரு அணிகளும் இன்று இரவு லயனில் நடக்கும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.

GETTY IMAGES

சமபலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், அடுத்த உலகக்கோப்பை குறித்து சர்வதேச கால்பந்து சங்க தலைவர் ஜியானி இன்பான்டினோ கூறுகையில்,

‘அடுத்த உலகக்கோப்பை போட்டியில் (2023) பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 24யில் இருந்து 32 ஆக அதிகரிக்கப்படும். உலகக்கோப்பை போட்டிக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்