மெஸ்ஸியை தலையால் முட்டி சரமாரியாக தாக்கிய சிலி வீரர்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்பவானுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in கால்பந்து

அமெரிக்கா அணிகள் மட்டும் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், சிலி அணிக்கு எதிரான போட்டியின் போது ஜம்பவான் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

கோபா அமெரிக்கா தொடரில் இன்று மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும், மேடெல் தலைமையிலான சிலி அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றிப்பெற்றது.

போட்டியின் 37 வது நிமிடத்தில், மெடெல், மெஸ்ஸியை சரமாரியாக தலையால் முட்டி தாக்கினார். இதை தொடர்ந்து இரு அணி வீரர்களும், மைதானத்திலே மோதிக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் பராகுவேய நடுவர் மரியோ டயஸ் டி விவர், மோதலில் ஈடுபட்ட இரு அணித்தலைவர்களுக்கும் சிவப்பு அட்டை காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றினார்.

மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது இதுவே இரண்டாவது முறையாகும். 15 ஆண்டுகளுக்கு முன் கால்பந்தில் கால்பதித்த 2005 ஆம் ஆண்டு, மெஸ்ஸி முதன் முறையாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நினைவுக் கூரதக்கது.

தன்னை தாக்கிய மேடெலை, திருப்பி தாக்காமல் அவரை தடுத்து, தன்னை பாதுகாத்துக் கொண்ட மெஸ்ஸிக்கும் நடுவர் தவறாக சிவப்பு அட்டை காண்பிடித்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டும் ரசிகர்கள், நடுவரை கடுமையாக விமர்சித்து கொந்தளித்துள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்