இரண்டு முறை சாம்பியனான ஜேர்மனியை பழிதீர்த்த ஸ்வீடன்! அரையிறுதிக்கு தகுதி

Report Print Kabilan in கால்பந்து

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஜேர்மனி அணியை வீழ்த்தி ஸ்வீடன் அரையிறுதியில் நுழைந்தது.

8வது மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரான்சில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கால்யிறுதி போட்டியில் ஜேர்மனி-ஸ்வீடன் அணிகள் மோதின.

இரண்டு முறை சாம்பியனான ஜேர்மனியை அணியை எதிர்கொண்ட ஸ்வீடன் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

அதன் பின்னர் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் (48வது நிமிடம்) ஸ்வீடனின் பிளாக்ஸ்டெனியஸ் ஒரு கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, ஜேர்மனி பதில் கோல் அடிக்க கடுமையாக போராடியது.

ஆனால், ஸ்வீடனின் தடுப்பு அரணை உடைக்க முடியாததால், பிளாக்ஸ்டெனியஸ் அடித்த கோல் ஸ்வீடனுக்கு வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் ஸ்வீடன் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Reuters

மேலும், பெரிய தொடர்களில் 1995ஆம் ஆண்டுக்கு பிறகு ஜேர்மனியை முதல் முறையாக வீழ்த்திய ஸ்வீடன், 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

அத்துடன் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது. ஸ்வீடன் அணி அடுத்து வரும் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை சந்திக்க உள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்