நெய்மர் இல்லாத நிலையிலும் மிரட்டும் பிரேசில்! மரண அடி வாங்கிய பெரு

Report Print Kabilan in கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி 5-0 என்ற கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது.

12 அணிகள் விளையாடி வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர், பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான பிரேசில் அணி நேற்று நடந்த போட்டியில் பெரு அணியை எதிர்கொண்டது.

நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக அணியில் இடம்பெறாததால், பிரேசில் அணியில் அவருக்கு பதிலாக வில்லியன் விளையாடி வருகிறார்.

போட்டியின் தொடக்க முதலே பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. 14வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை, பிரேசில் வீரர் கேஸ்மிரோ தலையால் முட்டி கோலாக்கினார். அதனைத் தொடர்ந்து 18வது நிமிடத்திலும், 31வது நிமிடத்தில் பிரேசில் இரண்டு கோல் அடிக்க, முதல் பாதியில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

Bunda Mendes/Getty Images

அதன் பின்னர் இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் டேனி ஆல்வ்ஸ் ஒரு கோல் அடித்தார். ஆனால், பெருவினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் நெய்மருக்கு பதிலாக விளையாடும் வில்லியன் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் பெருவின் கேப்ரியல் ஜீசஸ் கோட்டைவிட்டதால், பிரேசில் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers