பிபா கால்பந்து தரவரிசை வெளியீடு: எந்த அணி முதலிடம்?

Report Print Kabilan in கால்பந்து

பிபா வெளியிட்டுள்ள கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில், பெல்ஜியம் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

உலகின் மிகப்பெரிய கூட்டமைப்பான பிபா (உலக கால்பந்து கூட்டமைப்பு) கால்பந்து அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெல்ஜியம் அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

நட்சத்திர வீரர் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி, சமீபத்தில் நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்றது. இதன்மூலம் 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல் இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து அணி 14வது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பிரான்ஸ், 3வது இடத்தில் பிரேசில், 4வது இடத்தில் இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

ஜேர்மனி (11), அர்ஜெண்டினா (12), இத்தாலி (14) ஆகிய அணிகள் தரவரிசையில் பின்தங்கியுள்ளன.

பிபா தரவரிசை
  • பெல்ஜியம்
  • பிரான்ஸ்
  • பிரேசில்
  • இங்கிலாந்து
  • போர்ச்சுக்கல்
  • குரோஷியா
  • ஸ்பெயின்
  • உருகுவே
  • சுவிட்சர்லாந்து
  • டென்மார்க்

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்