வரலாற்றில்.. முதல் சாம்பியனாக முடிசூடியது ரொனால்டோவின் போர்ச்சுகல்

Report Print Basu in கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு முதன் முறையாக நடத்திய நேஷன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றி இத்தொடரின் முதல் சாம்பியனாக முடிசூடியது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி.

55 ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான முதல் நேஷன்ஸ் லீக் தொடர் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. பல கட்டங்களாக போட்டி தொடர் நடந்து முடிந்த நிலையில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து என நான்கு அணிகள் தொடரின் நாக்-அவுட் சுற்றில் விளையாடின.

இதில், நேஷன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு போர்ச்சுகல், நெதர்லாந்து அணிகள் முன்னேறின. போர்ச்சுகலில் நடந்த இறுதிப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 60வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கோன்கலா கேட்ஸ் கோல் அடித்தார். இதனையடுத்து இறுதி நிமிடம் வரை நெர்தலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி போர்ச்சுகல் அணி நேஷன்ஸ் லீக் தொடரின் முதல் கோப்பையை கைப்பற்றி சாம்பியனாது. ஆட்ட நாயகனாக போர்ச்சுகல் அணியின் இளம் வீரர் ரபென் டயஸ் அறிவிக்கப்பட்டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்