நெய்மர் மீது பாலியல் குற்றம் சுமத்திய மொடல் அழகியின் பின்னணி பற்றி வெளியான தகவல்

Report Print Vijay Amburore in கால்பந்து

நெய்மர் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்திய பெண், ஏற்கனவே தன்னுடைய முன்னாள் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

நஜிலா ட்ரிந்தடே என்கிற 26 வயதான மொடல் அழகி, கடந்த மாதம் பாரிசில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த போது பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து தாக்கியதாக புகார் அளித்திருந்தார்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து நெய்மர் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த மொடல், நெய்மர் உடன் ஹோட்டலில் இருக்கும் ஒரு நிமிட வீடியோ ஒன்றினை பிரேசில் நாட்டு தொலைக்காட்சியின் வாயிலாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நஜிலா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நஜிலாவிற்கும் அவருடைய முன்னாள் கணவருக்கும் 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அந்த மகனுடன் தான் நெஜிலா தற்போது வசித்து வருகிறார்.

2014ம் ஆண்டு ஒருநாள் நெஜிலாவிற்கும், அவருடைய முன்னாள் கணவர் எல்விஸ் அல்வ்ஸிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது நெஜிலாவின் கைகளை அவருடைய கணவர் மடக்கியுள்ளார். உடனே அங்கிருந்த கத்தியை கொண்டு நெஜிலா, கணவரின் நெஞ்சுப்பகுதியில் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய தினம் தற்காப்பிற்காக தான் நான் கத்தியால் குத்தினேன். வேறு எந்த எண்ணமும் கிடையாது என நெஜிலா விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், தன்னுடைய சகோதரனை அழைத்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்