26வது லா லிகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பார்சிலோனா.. சாதனை படைத்த மெஸ்சி!

Report Print Kabilan in கால்பந்து

நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 26வது முறையாக லா லிகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் லா லிகா கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் 20 கிளப் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், நடப்பு சாம்பியானான பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் லெவன்டி அணியை வீழ்த்தியது.

அந்த அணியில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்சி 26வது நிமிடத்தில் கோல் அடித்தார். பார்சிலோனா இதுவரை விளையாடிய 35 ஆட்டங்களில் 25 வெற்றி, 2 தோல்வி, 8 டிரா என 83 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் அட்லெண்டிகோ மாட்ரிட் அணியும், ரியல் மாட்ரிட் அணி 3வது இடத்திலும் உள்ளன. பார்சிலோனா அணி இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.

எனவே, அந்த அணி கைப்பற்றிய 26வது லா லிகா சாம்பியன் பட்டம் இதுவாகும். அத்துடன் மெஸ்சி 10வது முறையாக பார்சிலோனாவுக்கு இந்த பட்டத்தை வென்று கொடுத்து, அதிக முறை லா லிகா கோப்பையை அந்த அணிக்கு வென்று கொடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers