தேசிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சென்.மேரிஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி தனது மூன்றாவது போட்டியில் ஓல்ட் பென்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டி அன்மையில் கொழும்பு சென்.பெனடிக் மைதானத்தில் நடைபெற்றது.

முதற்பாதியாட்டத்தில் அருள்ராசா யூட் முதல் கோலை அடித்தார். அந்தக் கோலுடன் முதல் பாதியாட்டம் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியாட்டத்திலும் யூட் மேலும் ஒரு கோலை அடித்தார். முடிவில் சென்.மேரிஸ் அணி, 02:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில் இதுவரையில் சென்.மேரிஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது.

முதற்போட்டியில் ரெட்சன் அணியையும், இரண்டாவது போட்டியில் கொழும்பு கூரே அணியையும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்