பரந்தன் வட்டத்தை வீழ்த்தி சம்பியனாகியது ஜெகமீட்பர் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

கிளிநொச்சி திருநகர் விளையாட்டுக்கழகம், கிளிநொச்சி மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் அணிக்கு 9 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வந்தது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அன்மையில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியை எதிர்த்து பரந்தன் இளைஞர் வட்டம் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் ஜெகமீட்பர் அணி ஒரு கோலைப் போட்டது. இரண்டாம் பாதியில் ஜெகமீட்பர் அணி மேலும் ஒரு கோலை அடித்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பரந்தன் அணி கோல் ஒன்றைப் பெற்றது. எனினும் விடாது ஆடிய ஜெகமீட்பர் அணி மேலும் ஒரு கோலைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

முடிவில் ஜெகமீட்பர் அணி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஜெகமீட்பர் அணியின் பெரிசு இறுதிப்போட்டி ஆட்டநாயகனாகவும், அதே அணியின் நியூட்டன் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்