பிரான்ஸ் தமிழர்கள் வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்திய இளவாலை யங்ஹென்றிஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வலிகாமம் லீக் ஒழுங்கமைந்து நடத்திய கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானங்களில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில் வடமாகாணம் தழுவிய வகையில் நடைபெற்றதுடன், 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.

வழமையாக யாழ்ப்பாண லீக்கினால் நடத்தப்படும், இந்தச் சுற்றுப்போட்டியானது இம்முறை வலிகாமம் லீக்கினால் நடத்தப்பட்டது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முந்தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து வேலணை துறையூர் ஐயனார் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் பதிவு செய்யவில்லை.

தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்தில் யங்ஹென்றிஸ் அணி அடுத்தடுத்து 3 கோல்களைப் பதிவு செய்து தமது வெற்றியை உறுதி செய்தது.

யங்ஹென்றிஸ் அணி சார்பாக, சுபிதாஸ், ஞானரூபன் மற்றும் தனேஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கிண்ணத்தையும் யங்ஹென்றிஸ் அணியானது வெற்றிக்கொண்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers