விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத போட்டி: வட்­டக்­கச்சி மத்­தியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது கிளி­நொச்சி ம.வி அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

கிளி­நொச்சி இந்­துக் கல்­லூரி பழைய மாண­வர் சங்­கத்­தால் கிளி­நொச்சி மாவட்­டப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யில் சத்தியமூர்த்தி ஞாப­கார்த்த வெற்­றிக் கிண்­ணத்­துக்­காக நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி கிண்­ணம் வென்­றது.

கிளி­நொச்சி இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்தியாலய அணியை எதிர்த்து வட்­டக்­கச்சி மத்­திய கல்­லூரி அணி மோதி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட 90 நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

முடி­வில் 4:2 என்ற கோல் கணக்­கில் கிளி­நொச்சி மகா வித்­தி­ யா­லய அணி வெற்­றி­பெற்­றது.

சிறந்த வீர­னாக கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி­யின் சஞ்­சீ­வன், தொட­ராட்ட நாய­க­னாக கிளி­நொச்சி மகா வித்தியா­லய அணி வீரன் டிலக்­சன், சிறந்த கோல்க் காப்­ப­ளா­ராக வட்­டக்­கச்சி மத்­திய கல்­லூ­ரி­யின் கோல்க் காப்­பா­ளர் சிவகரன் ஆகி­யோர் தெரி­வா­கி­னர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers