அர்ஜென்டினாவை வீழ்த்தி பிரேசில் முன்னிலை

Report Print Kavitha in கால்பந்து

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி வாகை சூடியது.

அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம்பெறாத நிலையில், பிரேசில் அணிக்காக நெய்மர் அதிரடியாக களமிறங்கினார்.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்திலும் கோல் ஏதும் விழாமல் இரு அணிகளும் சமநிலை வகித்தன.

காயம் காரணமாக வீணான நேரத்தை ஈடு செய்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் கடைசி 93வது நிமிடத்தில் கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். நெய்மர் பறக்கவிட்ட பந்தை மிராண்டா மின்னல் வேகத்தில் தலையால் முட்டி வலைக்குள் திணித்தார்.

இதனால் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

மேலும் இரு அணிகள் 105 முறை மோதியுள்ளதில் பிரேசில் 41-38 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்