மின்னல் வேகத்தில் செயல்பட்ட ரொனால்டோ! அபார வெற்றி பெற்ற யுவாண்டஸ்

Report Print Kabilan in கால்பந்து

Serie A லீக்கில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடிக்க உதவியதால், யுவாண்டஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தியது.

இத்தாலி கால்பந்து லீக் தொடரான Serie A-யில் யுவாண்டஸ்-நபோலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் நபோலி அணியின் டிரையிஸ் மெர்ட்டன்ஸ் கோல் அடித்தார்.

அதன் பின்னர், யுவாண்டஸ் அணியின் மரியோ மாண்ட்சுகிச் ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அபாரமாக பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதியின் 49வது நிமிடத்தில், யுவாண்டஸ் அணிக்கு கிடைத்த Free Kick வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ, மின்னல் வேகத்தில் பந்தை அடிக்க எதிரணி கோல் கீப்பர் அதனை தடுத்தார்.

எனினும் யுவாண்டஸ் அணி வீரர் மெண்டசுகிச், கம்பத்தில் பட்டு வந்த அந்த பந்தை சிறப்பாக கோலாக்கினார். அதனைத் தொடர்ந்து, 76வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை, ரொனால்டோ தலையால் முட்டி கோல் எல்லையை நோக்கி தள்ளினார்.

ஆனால், கோல் கீப்பர் அதனை தடுத்தாலும் யுவாண்டஸின் லியோனார்டோ பொனுசி கோலாக மாற்றினார். இதன்மூலம் யுவாண்டஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்காவிட்டாலும், இரண்டு கோல்கள் அடிக்க காரணமாக இருந்தார். யுவாண்டஸ் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.


மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers