இலங்கையின் மிகப்பெரிய தொடரின் இறுதிக்குள் நுளைந்த குரு­ந­கர் பாடும்­மீன் அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் இரண்டாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடும்மீன் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் அனுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் இடம்பெற்ற இந்த அரையிறுதி ஆட்டத்தில் வடக்கின் யாழ் மாவட்டத்தில் இருந்து அரையிறுதிக்குள் நுளைந்த குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து கிழக்கின் மட்டக்களப்பு யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதியது.

முதல் பாதியின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றிருந்தன.

இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் மிகச் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தின. இரண்டாவது பாதியில் கோல்கள் எதுவும் பதிவாகவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் (பெனால்டி) வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வைத்து 1:3 என்ற கோல் கணக்­கில் மட்டக்களப்பு யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தி வெற்­றி­பெற்ற குரு­ந­கர் பாடும்­மீன் அணி இறுதிப்போட்டிக்குள் நுளைந்தது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்