நாவாந்­துறை சென். மேரிஸ் அணியை போராடி வென்ற வளர்­மதி விளை­யாட்­டுக் கழ­கம்

Report Print Samaran Samaran in கால்பந்து

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் வடக்­கின் கில்­லாடி வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொடர் அரி­யாலை கால்­பந்­தாட்ட பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நடைபெற்றுவருகின்றது.

நேற்­று­முன்­தி­னம் ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்ற ஆட்­டத்­தில் அச்­செழு வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து நாவாந்­துறை சென். மேரிஸ் அணி மோதி­யது.

இந்த ஆட்டத்தில் நாவாந்­துறை சென். மேரிஸ் அணியை வீழ்த்தி அச்­செழு வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி, இரண்­டா­வது பாதி­யி­லும் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் கோல்­கள் எது­வும் பதி­வா­கா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

முடி­வில் 6:5 என்ற கோல் கணக்­கில் அச்­செழு வளர்­மதி அணி வெற்­றி­பெற்­றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers