தேசியமட்ட உதைபந்தாட்டத்தில் சம்பியனாகி சாதனை படைத்த மகாஜனா கல்லூரி

Report Print Samaran Samaran in கால்பந்து

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது.

நேற்று மாலை அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது.

போட்டி முடிவில் எவ்வித கோல்களும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் 3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா வெற்றி பெற்று 2018 ஆண்டிற்குரிய சம்பியனாகியது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக மகாஜனா அணித்தலைவர் வ.ஜக்சனும் இந்த சுற்றுப்போட்டியின் தொடர் நாயகனாக மகாஜனா அணியின் உபதலைவர் ச.கனுயனும் (ராசாவும்) தெரிவாகினர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers