எப்.ஏ கிண்ண தொடரில் 32 அணிகளுக்குள் நுழைந்த சென்.மேரிஸ் அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனம் தேசிய ரீதியில் ஏவ்.ஏ கிண்ணத்துக்காக கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தி வருகின்றது.

இதன் போட்டியொன்று, ஹற்றன் மைதானத்தில் 8 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து ஹற்றன் ரெனோன் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் சென்.மேரிஸ் அணி, 2 கோல்களை அடித்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் சென்.மேரிஸ் அணி மேலும் ஒரு கோலை அடித்தது. பதிலுக்கு ஹற்றன் ரெனோன் அணி ஒரு கோலை அடித்தது.

முடிவில் சென்.மேரிஸ் அணி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

சென்.மேரிஸ் அணி சார்பாக அடிக்கப்பட்ட கோல்களை, யோனிஸ்ரன், சுபோதரன் மற்றும் மதி ஆகியோர் அடித்தனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers