மெஸ்ஸி தான் சிறந்த வீரர்: சக வீரர்களின் கூற்றுக்கு ரொனால்டோ கொடுத்த பதில் என்ன?

Report Print Vijay Amburore in கால்பந்து

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய பொழுது, சக வீரர்கள் மெஸ்ஸி தான் எப்பொழுதும் சிறந்த வீரர் என கூறி குறும்பு செய்துள்ளனர்.

உலக கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ மிகப்பெரிய சகாப்தங்களாக உருவான பின்னர், இருவரில் யார் சிறந்த வீரர் என்ற கருத்து ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இது ரசிகர்களை தாண்டி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சக வீரர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் பிரபல கால்பந்து வீரர் Peter Crouch தான் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில், ரொனால்டோ பற்றிய ரகசியம் ஒன்றினை கூறியுள்ளார்.

அதில் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த சமயம் கண்ணாடி முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு, நான் மிகவும் அழகாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த சக வீரர்கள், எதுவாக இருந்தாலும், உன்னை விட மெஸ்ஸி தான் சிறந்த வீரர் என கூறியுள்ளனர்.

இதனால் எந்தவித கோபமும் அடையாத ரொனால்டோ, தன்னுடைய தோற்பட்டையை சிலிர்த்துக் கொண்டே, ஆம் அது உண்மை தான். ஆனால் என்னை போன்ற அழகு அவரிடம் இல்லையே என கூறி சிரித்துள்ளதாக அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers