பிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர அணித்தலைவராக நெய்மர் நியமனம்

Report Print Kabilan in கால்பந்து

பிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர அணித்தலைவராக, இளம் வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரேசிலின் முன்னணி கால்பந்து வீரரான நெய்மர் தற்போது அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். உலகளவில் ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் கூட்டம் நெய்மருக்கு உண்டு.

நெய்மர் தற்போது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்பு சாம்பியன் அணியான பார்சிலோனாவில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், பிரேசிலின் நிரந்தர அணித்தலைவராக நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு நெய்மர் அணித்தலைவராக செயல்பட்டிருந்தாலும், ரஷிய உலகக் கிண்ண தொடரில் சில்வா, மார்சிலோ ஆகியோர் அணித்தலைவர்களாக செயல்பட்டனர்.

ஆனால், இனி நெய்மரே பிரேசிலின் நிரந்தர அணித்தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers