12 ஆண்டுகளில் முதல் முறையாக தனது இடத்தை இழந்த மெஸ்சி!

Report Print Kabilan in கால்பந்து

கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக சிறந்த கால்பந்து வீரர்களுக்கான ஆண்டுப் பட்டியலில், முதல் மூன்று இடங்களை லயோனல் மெஸ்சி இழந்துள்ளார்.

அர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர் லயோனல் மெஸ்சி, போர்த்துகல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் கால்பந்து ஜாம்பவான்களாக விளங்கி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த 12 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான விருதினை மாறி மாறி வென்று வந்தனர். ஆனால், இம்முறை சிறந்த வீரருக்கான விருது பரிந்துரைப் பட்டியலில் ரொனால்டோ, லூக்கா மோட்ரிக் மற்றும் முகம்மது சாலா ஆகியோரின் பெயர்களே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

இதனால் கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக மெஸ்சியின் பெயர் இந்த பரிந்துரைப் பட்டியலின் முதல் 3 இடங்களில் இடம்பெறவில்லை.

இதன்மூலம், ரொனால்டோ-மெஸ்சி ஆகியோரில் சிறந்த வீரர் யார் என்ற போட்டி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 வீரர்களில் லூக்கா மோட்ரிக் விருதினை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மெஸ்சி கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 6 முறை சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SIPA USA

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers