பார்சிலோனா வீரரை வாங்க 81 மில்லியன் பவுண்ட்: பிரான்ஸ் கிளப் அணி விருப்பம்

Report Print Kabilan in கால்பந்து

பார்சிலோனா அணியின் நடுவரிசை வீரரான இவான் ராக்கிடிச்சை, 81 மில்லியன் பவுண்டிற்கு வாங்க பிரான்ஸ் கிளப் அணியான பி.எஸ்.ஜி விருப்பம் தெரிவித்துள்ளது.

குரோசியாவின் நடுகள வீரரான இவான் ராக்கிடிச், தற்போது பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவரது ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு வரை உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸின் முன்னணி கிளப் அணியான பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன், இவானை 81 மில்லியன் பவுண்டிற்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதற்கு பார்சிலோனாவும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இவானின் விருப்பத்தையும் கேட்க இருக்கிறது. எனினும், பார்சிலோனா அணியில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, ஏற்கனவே நட்சத்திர வீரர்களான இனியஸ்டோ, பவுலினோவை பார்சிலோனா வெளியேற்றியுள்ளது. இந்நிலையில், இவானையும் வெளியேற்றினால் அணியில் மூன்று வெற்றிடம் ஏற்படும். இதன் காரணமாக இவானை விற்க பார்சிலோனா யோசித்து வருகிறது.

பார்சிலோனா அணியானது, தங்களது மொத்த வருமானத்தில் 70 சதவிதத்திற்கு மேல் வீரர்களுக்கு சம்பளமாக வழங்கக்கூடாது என்ற திட்டத்தில் உள்ளது.

அதன்படி, அதிக அளவில் சம்பளம் பெறும் வீரர்களை விற்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே, இவானும் பி.எஸ்.ஜி அணிக்கு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers