ரொனால்டோவை விற்றது வரலாற்று பிழை: ரியல் மாட்ரிடின் முன்னாள் தலைவர்

Report Print Kabilan in கால்பந்து

ரியல் மாட்ரிட் அணி கிறிஸ்டியானோ ரொனால்டோவை, யுவாண்டஸ் அணிக்கு விற்றது வரலாற்றுப் பிழை என ரியல் மாட்ரிடின் முன்னாள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்தவரும், உலகின் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரை விளையாடினார்.

அதன் பின்னர், தற்போது யுவாண்டஸ் அணிக்கு 100 மில்லியன் பவுண்டுக்கு மாறியுள்ளார். ரொனால்டோவின் வருகையை யுவாண்டஸ் அணி வரவேற்றுள்ள நிலையில், ரியல் மாட்ரிட் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் தலைவரான ரமோன் கால்டெரோன் இதுகுறித்து கூறுகையில், ரியல் மாட்ரிட் அணி மிகப்பெரிய தவறு செய்துள்ளது, ரொனால்டோவை யுவாண்டஸ் அணிக்கு விற்றது வரலாற்று பிழையாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்