குரேஷியா செய்யாத தவறு... பிரான்ஸ் அணிக்கு கிடைத்த வாய்ப்பு: வெடித்த சர்ச்சை

Report Print Deepthi Deepthi in கால்பந்து

பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது.

போட்டி என்றால் சர்ச்சைகள் இருப்பது போன்று இறுதி ஆட்டத்திலும் குரேஷியா செய்யாத தவறுக்கு பிரான்ஸ் அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த ஆண்டு போட்டியில் விஏஆர் - வீடியோ அசிஸ்டண்ட் ரேஃபரி எனப்படும் வீடியோ காட்சியை சோதனை செய்து ஒருவர் தீர்ப்பு அழிப்பது கடைபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் வீரர்கள், கால்பந்து வல்லுநர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குரேஷியா சேம் சைட் கோல் போட்டதால், பிரான்ஸ் முன்னனிலை பெற்றது. அதற்கு அடுத்த தவறை மீண்டும் குரேஷியா செய்தது.

அதன்படி சரியாக 38வது நிமிடத்தில் குரேஷியாவின் இவான் பெரிசிக் கையில் பால் பட்டு நழுவிச்சென்றது. இதனால் இதனால் பிரான்சிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கால்பந்து குறித்து அதிக எழுதும், பேசும் முன்னாள் நடிகர் பிடானா விஏஆர் நடுவராக செயல்பட்டார்.

பெரிசிக் கையில் பால் பட்டு நழுவிச்சென்ற வீடியோவை மீண்டும் மீண்டும் சோதனை செய்தார். பல கட்ட சோதனைக்கு பின்பே, பிரான்சிற்கு கோலடிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இது தவறான முடிவு என்று சர்ச்சை எழுந்துள்ளது.

வேண்டுமென்றே அவர் பந்தை பிடிக்கவில்லை, அவரால் செயலாற்ற முடியாத நிலையில் பந்து அவர் கையில்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குரேஷியா கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...